டில்லி:

சுகாதாரத்துறையின்  சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம்  9வது இடத்திற்கு பின்தங்கிய அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்துக்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத்துறையில் மாநிலங்களின் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும் மத்தியஅரசு பட்டியில் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகி உள்ள சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக் கான பட்டியலில் தமிழகம் 9வது இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு   தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா இணைந்து அகில இந்திய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் மாநாட்டை  2018ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி நடத்தியது. இதில், தமிழக மருத்துவப் பபல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சே.கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  நிதி ஆயோக் உறுப்பினரும், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருமான வினோத் கே பவுல் மற்றும் 13 மாநில மருத்துவ பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

2018ம் ஆண்டு டிசம்வர் 25ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்படம் (பைல் படம்)

அந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருமான வினோத் கே பவுல் தேசிய அளவில் சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தேசிய அளவிலான மருத்துவ சேவை நீடித்த வளர்ச்சி இலக்குக்கான தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடத்தில் தமிழகம் இருக்கிறது என்று புகழ்ந்து கூறினார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், தமிழகம் சுகாதாரத் துறையில் 9வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நிஃபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா சுகாதாரத்துறையில் முதலிடத்தில் இருப்பதாகவும், ஆந்திர மாநிலம் 2வது இடத்தையும், மகாராஷ்டிரா 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.