டில்லி

உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  உடல்நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கடந்த ஜூன் மாதம் அமல்லக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தனிச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தாம் சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

கடந்த 19 ஆம் தேதி இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் இந்த உத்தரவுக்கு எதிராகச் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  சென்ற முறை நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்ற, உத்தரவிட்டு செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 22 ஆம் தேதி அன்று ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது   மேலும் அந்த  அறிக்கையில் அவருக்குப் பித்தப்பை கற்கள் இருப்பதாகவும் நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.