டில்லி

ற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

உலக மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் முதன் முதலாக உலக நாடுகளுக்கு பரவி தற்போது அது கட்டுக்குள் உள்ளது.. ஆனால், மீண்டும் சீனாவில் ஒரு வகை மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பெருந்தொற்றின் தொடக்க நிலைகளின்போது காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  குறிப்பாக பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டும் சீன அரசாங்கம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே உலக சுகாதார அமைப்பு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,

”சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இந்தியாவுக்குப் பெரிய அளவுக்கு அபாயம் இல்லை. .நாங்கள் H9N2 வைரஸ் காய்ச்சல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சினை ஆகிய இரண்டையுமே உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்தியா எத்தகைய அவசர நிலையையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது” 

என்று தெரிவித்துள்ளது.