குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பட பேனர்கள் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Must read

க்னோ

குடியுரிமை சட்ட போராளிகள் படம் போட்ட பேனர்கள் வைத்தற்கு உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் லக்னோ நகரில் உள்ள மாதே கஞ்ச் பகுதியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.   இதனால் காவல்துறையினர் த்டியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.  காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்ல் ஒரு இளைஞர் மரணம் அடைந்தார். மேலும் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் என சமூக ஆர்வலர்கள் சுமார் 60 பேர் மீது புகார் பதியப்பட்டது.  இதில் ஆர்வலர் சதஃப் ஜாஃபர், மனித உரிமை ஆர்வலர் முகமது சாயப், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரி ஆகியோரும் உள்ளனர்.  இவர்களுடைய படத்துடன் கூடிய பேனர்கள் லக்னோ நகரில் உள்ள தலைமைச் செயலகம் எதிரில் மற்றும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு எழுப்பினர்  இந்த பேனர்கள் அனைத்தும் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்த படி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.  இந்த பேனர்கள் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சிறப்பு அமர்வின் கீழ் நடந்தது .  இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை எனவும் காவல்துறையின் ஊகம் எனவும் ஆர்வலர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாதூர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்கா ஆகியோரின் இந்த சிறப்பு அமர்வில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களின் படத்தைப் பேனரில் வைத்தது நீதியற்ற செயல் என மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்டவர்களின் தனி உரிமை மீது நடந்த அத்துமீறல் எனவும் அமர்வு கூறி உள்ளது.

 

 

More articles

Latest article