சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘நமது கொங்கு முன்னேற்ற கழக’ வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று நடந்தது.

அப்போது, நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னம் கேட்டிருந்தனர்.

பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் ரமேஷூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

[youtube-feed feed=1]