நடிகை கஸ்தூரி தனது பேச்சால் பரபரப்பு ஏற்படுத்துபவர் . அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் இருந்து விடுபட்ட நடிகை கஸ்தூரி, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தா உடை அணிந்திருக்கிறார் . இது எதற்க்காக என்று எந்த ஒரு காரணத்தையும் பதிவேற்றவில்லை .

இதனால் குழப்பமடைந்த அவர் ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷூட்டிங்கா இல்லை கஸ்தூரி மதம் மாறி விட்டாரா என்னும் குழப்பத்தில் உள்ளனர் . ஒரு சிலர் இக்கேள்வியை அங்கேயே கேட்டும் உள்ளனர் . ஆனால் இது வரை கஸ்தூரி இதற்கு விடையளிக்கவில்லை .