ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

ஹரியானா மாநிலம் சோனேபட்டிற்கு ஜூலை மாதம் 8 ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார்.

அப்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களுடன் சேர்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டார். டிராக்டர் ஒட்டியது மட்டுமல்லாமல் நடவுப் பணியிலும் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்தார்.

சஞ்சய் மாலிக் மற்றும் தஷ்பீர் குமார் ஆகிய விவசாயிகளின் குடும்பத்துடன் அங்கேயே அவர்கள் வழங்கிய உணவை சாப்பிட்டார்.

இதனையடுத்து சோனிபட் விவசாயிகளை சோனியா காந்தியின் இல்லத்திற்கு வரவழைத்த ராகுல் காந்தி அவரைகளை அழைத்து வர அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி வந்த அவர்கள் சோனியா காந்தியுடன் மதிய உணவு அருந்தியதோடு மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.