லண்டன்: பிரிட்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின விழா, அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர், அக்குடும்பத்தின் அங்கத்தவர்களாக கலந்துகொள்ளும் கடைசி விழாவாக ஆனது.

பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறுவதாய் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர் அறிவித்தது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு ஆர்ச்சி என்ற பெயரில் ஒரு குழந்தையும் உள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தும் அனுமதியளிக்க, அவர்கள் தங்களின் புதிய வாழ்வை, கனடாவில் துவக்கியுள்ளனர்.

மார்ச் மாத இறுதியில், அரச குடும்பம் சார்ந்த பட்டங்கள் & பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் துறக்கின்றனர் ஹாரியின் குடும்பத்தினர்.

இந்நிலையில், பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் காமன்வெல்த் தின விழா நடைபெற்றது. ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் – கமிலா, இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் ஆகியோர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரியும் மேகன் மார்க்கலும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், வெளியுறவுத்துறை செயலர் டாமினிக் ராப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.