ரோம்

த்தாலி நாட்டில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுதலால் அனைத்து விளையாட்டுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் வுகான் நகரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதையும் பாதித்தது.   அத்துடன் பல உலக நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியதால் உலக சுகாதார மையம் பல எச்சரிக்கை விடுத்துள்ளது    மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும், ஒருவரை ஒருவர் தொடுதல் ஆகியவற்றை அடியோடு நிறுத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை மையம் கூறி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ட்தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  முதலில் இரண்டாம் இடத்தில் இருந்த தென் கொரியாவை பின்னுக்குத் தள்ளி இத்தாலி  இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.   இந்நாட்டில் மூத்த குடிமக்கள் அதிகம் உள்ளதால் இந்த வைரஸ் தொற்று அவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகிர்டு.

இத்தாலி நாட்டில் லோம்பார்ட், வெனிஸ், மொடெனா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த பாதிப்பு காணப்படுவதால்  நாட்டின் 14 மாகாணங்களில் வசிக்கும் 1.6 கோடி பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளன்ர்.  நாடெங்கும் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.  விளையாட்டுக்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளன.  சிறைக் கைதிகளைக் காண பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.