பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா என மூன்று பேரும் மீண்டும் இணையும் படத்திற்கு ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘தளபதி’ படத்தின் ரஜினி கெட்டப் போலவே இதன் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.