பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவர் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகை சித்ரா கடைசியாக நடித்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அவர் இறப்பதற்கு முன்பு கால்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சபரீஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்ராவுடன் இணைந்து தேவதர்ஷினி, வினோதினி, நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் கால் சென்டரில் பணி புரிவர் போல காட்டப்படுகிறது.