நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது

Must read

சென்னை

டிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார்.  இவர் கழுத்து, கை என்று உடல் முழுக்க பல கிலோவிற்கு தங்க நகை அணிந்து நகைக்கடையாக வலம் வருவார்.  தவிர அரசியல் தாண்டி சினிமா தயாரிப்பு, சினிமா படங்களில் நடிப்பது போன்ற பணிகளையும் இவர் செய்து வருகிறார்

இவர் நாங்குநேரி இடைத்தேர்தல், ஆலங்குளம் சட்டசபை தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார்.  பெங்களூருவில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரிடம் இவர் ரூ. 7.2 கோடி ரூபாய் வாங்கி இவர் மோசடி செய்து இருக்கிறார். ஹரிநாடார் அவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி கடன் வாங்கி தராமல் ஆணையம் மட்டும் பெற்று ஏமாற்றி உள்ளார். இதையொட்டி கர்நாடக காவல்துறை ஹரி நாடாரைக் கைது செய்து தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குறிப்பிட்டு தன்னை அந்த அரசியல்வாதி ஏமாற்றிவிட்டதாகக் கூறி வீடியோவும் வெளியிட்டார்.  மேலும் அந்த அரசியல் வாதிக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் விஜயலட்சுமியை ஹரி நாடார் மிரட்டியதாகப் புகார் வந்தது. மிரட்டலைத் தொடர்ந்து விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

உடனே சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயலட்சுமி காப்பாற்றப்பட்டார். விஜயலட்சுமி ஹரி நாடாருக்கு எதிராக திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த 2020ஆம் வருடம் எழும்பூர் நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலமும் பெற்று இருந்தது இது குறித்து இத்தனை வருடமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

More articles

Latest article