பாலியல் சிடி : பா ஜ க மீது ஹர்திக் படேல் கண்டனம்

Must read

கமதாபாத்

ர்திக் படேல் பற்றிய பாலியல் சிடி வெளியானதற்கு பா ஜ க மீது அவர்  தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

குஜராத்தில் தற்போது தேர்தல் பிரசாரம் கடுமையாக நடந்து வருகிறது.   படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் பா ஜ கவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.   பாஜக ஹர்திக் படேல் மீது பாலியல் குற்றச் சாட்டு ஒன்றை எழுப்பி உள்ளது.   நேற்று ஒரு சிடியை பா ஜ க தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.  அந்த சி டியில் ஓட்டல் அறை ஒன்றில் ஹர்திக் படேல் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போலவும் உரையாடுவது போலவும் காட்சிகள் இருந்தன.  இந்த காணொலி நேற்று சில தொலைக்காட்சிகளிலும் வெளியாகியது.

இதற்கு ஹர்திக் படேல் பா ஜ க மீது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  அவர், “பா ஜ க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.   அதனால் எனது மதிப்பை குறைக்க இது போல ஒரு கேவலமான காரியத்தை செய்துள்ளது.    யாராவது பா ஜ க வை எதிர்த்தால் அவர்களைக் குறித்து பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவது பா ஜ க தலைவர்களுக்கு புதிய விஷயமில்லை.    இந்த திட்டத்தை தீட்டியது பா ஜ க தலைவர் அமித்ஷா தான்.  குஜராத்தில் பா ஜ க அசிங்கமாக தோற்க உள்ளது.   அதை தவிர்க்க அவர் இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான அரசியல் யுக்தியில் ஈடுபட்டுள்ளார்.” என கூறி உள்ளார்.

இதற்கிடையில் பாஸ் (படேல் அனாமல் அந்தோலன் சமிதி) யின் தலைவர்களில் ஒருவரான அஸ்வின் படேல் இதற்கு எதிராக கருத்து கூறி உள்ளார்.  “கடந்த 2015ஆம் ஆண்டு ஹர்திக் தனது பெண் தோழியுடன் முஸோரியில் தங்கி உள்ளார். இதற்கான ஆடியோ மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் என்னிடம் இருக்கிறது.   நான் ஹர்திக் படேலும் 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன்.   அதற்குள் அவர் இந்த சிடி பொய்யானது என நிறூபிக்க வேண்டும்.  இல்லை எனில் என்னிடம் உள்ள விவரங்களை நான் ஊடகத்துக்கு அளிப்பேன்.    படேல் இனத் தலைவர்கள்  இவ்வாறு தங்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தக் கூடாது” என அஸ்வின் படேல் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=R4yaIh8LJSw]

More articles

Latest article