ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் உறுதி செய்துள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.