நாமக்கல்:

ன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபலமான கோவிலான  நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1லட்சத்துக்கு எட்டு வடை மாலையுடன் விசேஷ பூஜை  நடைபெற்றது.

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள பிரபலமான அனுமன் சந்நிதிகளான  சுசீந்திரம்,  நாமக்கல் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதுபோல சென்னை நங்கநல்லூர், மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அனுமன் ஜெயந்தியை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதே போல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலிலும் இன்று அதிகாலையிலேய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதையடுத்து, ஆஞ்சநேயருக்கு 100008 வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன….

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது…