சென்னை:

ட்ட அமைச்சரை பார்க்க சென்ற முன்னாள் நீதிபதிக்கு ஒருவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி  உறுப்பினர் அட்டை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த நீதிபதி, விளக்கமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன். பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கி உள்ளார். இவர் தற்போது மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதியாக உள்ளார்.

இவர் சமீபத்தில் மத்திய சட்ட அமைச்சரை சந்தித்து பேச சென்றுள்ளார். இதை அறிந்துகொண்ட தமிழக பாரதியஜனதா கட்சியினர், அவர் எதற்காக அமைச்சரை பார்க்க வந்துள்ளார் என்பது குறித்து அறியாமலேயே, அவர் பாஜகவில் இணைய வந்துள்ளதாக கருகி, அவருக்கு தமிழக பாஜக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியுள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், என்ன நடந்தது என்பதை விளக்கமாக இரண்டு பக்க அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்…

கடந்த ஜூலை 6 ஆம் தேதி நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து சட்டம் சார்ந்த சில முக்கிய பிரச்சினைக்ள் குறித்து பேசுவதற்காக மட்டுமே சென்றிருந்தேன். அப்போது நான் பாஜகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.