மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையை அடுத்து இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் மீள வழி தேடி அலைகின்றனர். ஆனால் சின்னஞ்சிறு கிராம மக்கள் இந்த தொல்லைக்கு மாற்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

mizor

மிசோரோம் மாநிலத்தில் கிழக்கு பகுதியில் உள்ள கவ்பங் என்ற கிராமத்தின் மக்கள்தான் அவர்கள். இந்த கிராமத்தின் பி.சி.லால்மச்சுவானா என்ற பலசரக்கு கடைக்காரர் மூளையில்தான் இந்த யோசனை உதித்துள்ளது, கடைக்கு வாடிக்கையாக வரும் மக்கள் தாங்கள் வாங்கும் பொருளுக்கன விலையை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டால் போதும். உதாரணத்துக்கு 500 ரூபாய்க்கு பலசரக்கு வாங்கியவர் ஒரு வெள்ளைத்தாளில் 500 என்று எழுதி அவரது கையெழுத்தை போட்டு கடைக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை சரியானவுடன் அவர்கள் அவரவர்கள் தாங்கள் எழுதிக்கொடுத்த வெள்ளைத்தாள் கரன்சிக்கு ஏற்ற பணத்தை கடைக்காரரிடம் செலுத்திவிடுவார்கள்.
லால்மச்சுவானாவின் யுக்தியை அந்த கிராமத்தில் உள்ள மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பிக்க அங்கு நோட்டுத்தடையினால் ஏற்பட்ட அழுத்தங்கள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்களாக இருப்பதால் யாரும் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்று சகமனிதர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அக்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கரன்சியைவிட, இந்த கிராமத்தின் மளிகைக்ககடைக்கார் தரும் ரசீது முக்கியத்துவம் பெற்றுவிட்டது அதிசயம்தான்
Courtesy: SevenDiary.Com