டாக்கா

வங்கதேசம் அருகே ஹமூன் புயல் கரையக் கடந்துள்ளது.

வங்கக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. நேற்று இந்த புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறி பின்னர் மிகத்தீவிர புயலாக மாறியது. இதற்கு ஹமூன் எனப் பெயர் இடப்பட்டது

இன்று ஹமூன் புயல் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா – சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தீவிர புயலாக இருந்த ‘ஹமூன்’ புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.