டில்லி

ந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கடந்த 4 வருடங்களில் ரூ.7334 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச் ஏ எல்) விமானங்களை செய்து வருகிறது. ரஃபேல் ரக விமானங்களை இந்தியாவில் உருவாக்க இந்த நிறுவனம் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த நிறுவனத்துக்கு பதில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் கடும் சர்ச்சையை எழுப்பின.

மக்களவையில் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அந்த பதிலில் எச் ஏ எல் நிறுவனத்தின் வருமானம் குறித்த தகவல் அளிக்கப்பட்டது. ”கடந்த 4 ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ.7334 கோடி லாபம் ஈட்டி உள்ளது. அதில் ரூ. 1998 கோடி 2015-16 ஆம் வருட லாபமாகும்.
அதைப் போல் ரூ.2616 கோடி 2016-17 ஆம் வருடமும் ரூ.2070 கோடி 2017-18 ஆம் வருடமும் லாபம் ஈட்டி உள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரை இந்த நிறுவனம் ரூ.650 கோடி லாபம் ஈட்டி உள்ளது. அத்துடன் இந்த கால கட்டங்களில் எச் ஏ எல் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 58,651 கோடி ஆகும்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.