ஐஐடி உள்பட மத்தியஅரசு கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கம்!

Must read

டில்லி,

பிரபல ஐஐடி உள்பட மத்திய அரசின் 4 கல்வி நிறுவனங்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

பிரபலமான  டில்லி ஐஐடி,   டில்லி  பல்கலைக் கழகம், அலிகார்க் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஐஐடி புவனேஷ்வர்  உள்பட நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களின் இணை தளங்களை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹேக்கிங் செய்யப்பட்ட இணையதளங்களில், ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற வாசகம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த இணையதளத்தில்,  காஷ்மீரில் பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் குழு  மத்திய கல்வி நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி உள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானின் ரயில்வே இணையதளம் ஹேக் செய்யப்பட்டதற்கு பதிலடியாக, மத்திய கல்வி நிறுவன இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இணையதளத்தை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டில்லி மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம், ஐஐடி புவனேஸ்வர் ஆகியவற்றின் இணையதளங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், ஆனால்,  டெல்லி ஐஐடி இணையதளம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

More articles

Latest article