சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக, 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதையதுத்து, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா உள்பட போதைப்பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நிலையில், தடையை மீறி, முறைகேடாக குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த  வழக்கில், தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன்காரணமாக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த வழக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதியளித்தது தொடர்பான, கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு அனுமதி கொடுக்காத ஆளுநர் ரவி – 11வது முறையாக வாய்தா கேட்ட சிபிஐ