ண்டன்

ண்டனில் நடந்த தீ விபத்தில் பலர் வீடிழந்தனர்.  அவர்களுக்கு தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தஞ்சம் அளித்துள்ளன.

லண்டனில் நடந்த 24 மாடி குடியிருப்பு தீ விபத்தில் ஆறு பேர் மரணமடந்தனர்.  50க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.   பலர் வீடிழந்து, உடுத்தியுள்ள உடைக்கு மாற்றுடையும் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு லண்டனில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள், மற்றும் குருத்வாராக்கள் அபயக்கரம் நீட்டியுள்ளன.  தங்க இடம், உடுக்க உடை, உணவு ஆகியவைகளை மத சார்பின்றி அனைவருக்கும் வழங்கி வருகின்றன.

கட்டிடம் தீபிடித்த போது உதவியவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.   ரம்ஜான் நோன்பு இருப்பதால் இவர்கள் இரவு விழித்திருந்தனர்.  புகை வாசம் தெரிந்ததுமே எச்சரிக்கை அடைந்து,  தங்களால் முடிந்த வரை பலரும் வெளியேற உதவி செய்துள்ளனர்.

மனிதாபிமானம் இன்னும் உயிர் வாழ்வதன் அடையாளமே இது