ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள்

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்த பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறி வருகின்றனர். தங்களது சொந்த ஊருக்கு போவதாக தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஸ்டெர்லை ஆலைக்கு சொந்தமான குடியிருப்புக்கும் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவு கிறது. ஸ்டெர்லைட்  ஆலை மீண்டும் இயக்கப்படுவது சந்தேகமே.

தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஆலைக்கு வர வேண்டாம் என நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளில் உள்ளவர்களை உடடினயாக  சொந்த ஊர்களுக்கு திரும்பவும் உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்துவந்த வடமாநில ஒப்பந்த  தொழிலாளர்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், வாழ்வாதாரம் தேடியும்  கடந்த 1 மாதமாக வேலையில்லாத நிலையில்,  மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தங்களது சொந்த ஊருக்கு கிளம்பினர்.

நேற்று  இரவு  மூன்று லாரிகளில் போலீசார் பாதுகாப்புடன் அவர்கள்  திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து சென்னை சென்ற ரெயிலில் சென்ற அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.