காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்களை தயாரித்து வழங்குவதுடன், தமிழகஅரசுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளது.
தமிழகஅரசிங்ன முதலீடு இல்லாமல், மாத வாடகை அளவில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஜின் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது. இதற்காக முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பேரிடர் காலங்களிலும் தங்களை போன்ற முக்கிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு நன்றியும் தெரிவித்து உள்ளது.
தங்களது கல்ப் என்ஜினிரியங் என்ன செய்துகொண்டிருக்கிறது, அதன் வளர்ச்சி எத்தகையது., பிஎஸ்ஏ தொழில்நுட்பத்துடன் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி என்பதுகுறித்து, பத்திரிகை டாட் காம் செய்தியாளருக்கு நிறுவனத்தின் துணை தலைவர் மீனா அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் வருமாறு.
உங்கள் நிறுவனம் (கல்ப் என்ஜீனியரிங்) பற்றி சொல்லுங்கள் ?
எங்கள் நிறுவனம் GULF இன்ஜினியரிங், 2012 -ம் ஆண்டு காரைக்குடி அடுத்துள்ள நாச்சியார்புரத்தில் துவங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில், இலகு ரக வாகன விற்பனை மற்றும் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, டாடா ACE , மஹேந்திர மற்றும் ASHOK LEYLAND தோஸ்த் மாடல் வாகனங்களுக்கு கட்டுமானம் செய்து வந்தோம். எங்களது சிறப்பான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், சில ஆண்டுகளாக சிறியதாக வாடகை இடத்தில் நடத்தி வரப்பட்ட எங்களது நிறுவனம், சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதையடுத்து தொழிலை விரிவாக்கியதுடன், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை சீர் செய்யும் வைகையில், அதற்கென பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவானது நாச்சியார்புரத்தை அடுத்துள்ள கம்பனூரில் சுமார் 2ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தங்களது நிறுவனத்தின் அடுத்தக்கட்ட முயற்சியாகத்தான் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் தயாரித்து வழங்கி வருகிறோம். இதற்காக தொழில்நுட்ப வல்லுர்களைக்கொண்டு பணிகள் செய்து வருகிறோம். எங்களது தொழில்நுட்ப இயக்குனர் ராஜ்குமார் மாதவன், பொறியில் பட்டம் பெற்றவர். இவர், திட்ட மேலாண்மை துறையில் 14 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணை மற்றும் எரிவாய்வு துறையில் பணியில் உள்ளவர். தற்போது கொரோனா பேரிடரால், நாட்டில், ஏற்பட்டுள்ள, Oxygen பற்றாக்குறையை கருத்தில் கொண்டு PSA தொழில்நுட்பமுறையில் Oxygen உற்பத்தி செய்யும் கருவிகளை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து, அதை ஒருங்கிணைத்து சோதித்து பெட்டகவடிவில் (CONTAINERAIZED ) உள்ளடக்கி தரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த CONTAINERAIZED மூலம், ஆக்சிஜன் தேவையை மருத்துமனைகள் தங்கள் இடத்திலேயே Oxygen உற்பத்தி செய்து பூர்த்தி செய்ய கொள்ள முடியும்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன ?
எங்களது கல்ப் என்ஜினியரிங் நிறுவனம் வடிவமைத்துள்ள PSA தொழில்நுட்பத்துடன் PLUG & SERVE முறையில் இயங்கக்கூடிய சாதனம் மூலம் OXYGEN உற்பத்தி செய்து நேரடியாக மருத்துமனை பயன்பாட்டிற்கு கொடுக்க முடியும். இதனால், தற்போது OXYGEN வழங்குமுறையில் உள்ள வழங்கல் இடர்பாடுகள் களையப்பட்டு, இருக்கும் இடத்திலேயே Oxygen உற்பத்தி செய்யமுடியும் என்பதால் எங்களது இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நம் நாட்டில் உயிர் வளி (Oxygen ) பற்றாக்குறைக்கான தீர்வு என்ன?
மக்களுக்கு Oxygen தேவை எவ்வளவு அவசியம் என்பதை இந்த கொரோனா பேரிடம் காலம் தெளிவாக அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் தேவைப்படும் இடங்களில் உடனே Oxygen உற்பத்தி செய்யவேண்டிய பெருந்தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான கருவியையையே நாங்கள் உருவாக்கி தருகிறோம். இதுவே, பேரிடர் காலங்களில், ஏற்படும் இன்னல்களில் இருந்து நம்மை காக்கும். எங்களுடைய தயாரிப்பு போன்ற இயந்திரங்கள் இதை உறுதி செய்யும். Oxygen உற்பத்தி மற்றும் விநியோக வணிகம் பெரும் மாறுதல்களை சந்திக்க நேரிடும்.
ஆக்ஜிஜன் பற்றாக்குறையை போக்க தமிழகஅரசு எடுத்துவரும் முயற்சிகளில் தங்கள் பங்களிப்பு என்ன ?
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் பணியில் பெரும் சேவை ஆற்றிவருகிறது. OXYGEN உற்பத்தி வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 30 % மானியம் கொடுத்து ஊக்கமளித்து வருகிறது. GULF ENGINEERING நிறுவனமாகிய நாங்கள் தமிழக அரசின் அனைத்து மருத்துவமனைக்கும் BUILD & OPERATE முறையில் நீண்டகால வாடகைக்கு OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வழங்க விண்ணப்பித்துள்ளோம்.
இதன் மூலம் அரசிற்கு, CAPITAL EXPENDITURE இல்லாமல் இயந்திரத்தை நிறுவமுடியும். இயந்திரத்தின் உற்பத்தியை பொறுத்து மாத வாடகை வசூலிப்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப் படும். எங்களது ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்க அரசு மருத்துமனையில், எங்களுக்கு இடம் கொடுத்தால் போதுமானது. இது தொடர்பாக நாங்கள் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளோம். ஆக்சிஜன் தயாரிப்பதில், எங்களுடைய இந்த முயற்சி, அரசிற்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஆக்ஜின் உற்பத்தி குறித்து, தனியார் மருத்துவமனைக்கான தங்கள் ஆலோசனை என்ன ?
தனியார் மருத்துமனை OXYGEN உற்பத்தியில் சுய சார்பு நிலையை அடையவேண்டும். தங்களுக்கான OXYGEN தேவையை அவர்களே உற்பத்தி செய்துகொள்ள முடியும். நாங்கள் புறநகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நல்ல தீர்வாக 20 feet containeril உள்ளடங்கிய இயந்திரத்தை வடிவமைத்து வழங்க உள்ளோம். விருதுநகர் CARE AKPS மருத்துவமனையுடன் அப்படி ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் OXYGEN தயாரிக்கமுடியும். அதை போன்று மேலும் பல மருத்துவமனையுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளோம்.
மேலும், பெரும் மருத்துவமனைகளுக்கு நல்லொன்றுக்கு 12 லட்சம் லிட்டர் OXYGEN உற்பத்தி செய்யும் பெரும் இயந்திரத்திற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளோம். இதில், நாங்கள் ENGINEERING டிசைன் செய்து முழுதீர்வாக வழங்க உள்ளோம். எங்களோடு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரத்தியேகமான பிரபல நிறுவனங்கள் எங்களது SUB காண்ட்ராக்டர் களாக பணி செய்வதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நிறுவனங்கள் எங்களோடு கூட்டுசேர்ந்து பணிசெய்யும் என்றார்.
Oxygen பயன்படுத்தும் தனியார் தொழிற்சாலைகளுக்கான ஆலோசனை என்ன ?
இந்த பேரிடர் காலத்தில் Oxygen தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகள் சிரமப்பட்டுள்ளது. அப்படி எங்களை அணுகிய RE ROLLING மில் ஒன்றுக்கு அவர்களுடைய furnace மற்றும் CUTTING SET இயக்கூடிய வகையிலான OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வடிவமைத்து தீர்வாக தரவுள்ளோம். இது, எங்களுக்கும் ஒரு புது துறையை அடையாளப்படுத்தி உள்ளது. லும், இப்பொழுது, பல தொழிற்சாலைகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்க உள்ளோம். இது போன்ற தொழிற்சாலைகள் , இனிவரும் காலங்களில் சுய உற்பத்தியின் மூலமாகவே அவர்கள் துறையில் நிலைநிற்கமுடியும் என்ற நிலையை அடைந்துளோம்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கான உங்கள் தீர்வு மற்றும் ஆலோசனை என்ன ?
பெரிய நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தற்போது LIQUID OXYGEN வாங்கி Cryogenic tankukalil store செய்து பிறகு காற்றாக மாற்றி பயன்படுத்துகிறார்கள். இதற்கான இயந்திரங்கள் வாங்கும் செலவு மற்றும் தொடர்ச்சியாக LIQUID OXYGEN வாங்கும் செலுவுகளை கணக்கிட்டால், PSA தொழில்நுட்பத்துடன் நாளொன்றுக்கு 12 லட்சம் லிட்டர் Oxygen தயாரிக்கும் திட்டம் ECONIMICS படி feasible உள்ளது. இதன், கணக்கீட்டை பார்த்து பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் எங்களோடு சேர்ந்து பணிசெய்ய ஆயத்தமாக உள்ளார்கள். இது, Oxygen உற்பத்தி மற்றும் வழங்களில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
ஆக்சிஜன் தயாரிப்பில் தமிழக அரசு உங்களுக்கு எப்படி உதவுகிறது?
தமிழக அரசு எங்களை போன்ற தொழில் நிறுவனங்களை பேரிடர் காலத்திலும் பணிசெய்ய அனுமதிக்கிறார்கள் மற்றும் ஊக்கமளிக்கிறார்கள். எங்களை போன்ற சேவை நிறுவனங்களின் பணியாளர்களையும் முன் களப்பணியாளர்களாக கருதவேண்டும். அரசு, OXYGEN உற்பத்தி துறைக்கு தற்போது வழங்கி வரும் மானியம் 30 % இந்த துறையில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதை திட்டத்தை மேலும், ஆண்டு இறுதிவரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்ப் என்ஜினியரிங் விருதுநகரின் பிரபல மருத்துவமனையான AKPS மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அம்மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்திற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.