வதோரா,
குஜராத் மாநிலத்தில் திருமண விருந்து ஒன்றில் மதுஅருந்திய 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் வதோரா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில்  மது விருந்து நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் குஜராத்தில் மதுவிற்பனை செய்வதற்கும், குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மதுகுடிப்பதற்க தடை உள்ள மாநிலம் குஜராத் மட்டுமே.
அங்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வது, அண்டை மாநிலங்களில் இருந்து மதுவை கடத்தி வருவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு கள் வரை சிறைதண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு அமலில் உள்ளது.
இருந்தாலும், அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது பண்ணை வீடுகளில் மது விருந்து நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று வதோரா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மது விருந்து நடைபெற்று வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
அப்போது, தங்கு திருமண நிகழ்ச்சி தொடர்பாக மது விருந்து நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இந்த விருந்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் உள்டப பெரும் பணக்காரர்கள்  200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பண்ணை வீட்டில் திருமண பார்ட்டி நடைபெற்று வந்துள்ளது. அப்போது விருந்தினர்கள் தடையை மீறி மது சப்ளை செய்தது தெரிய வந்தது. இதன் காரணமாக மது விருந்தில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மது தடை செய்யப்பட்ட குஜராத்தில்,  கள்ளச்சாராய கும்பல்கள்  ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கும்பலிடம் இருந்து மது வாங்கி குடித்த  120 பேர் அகமதாபாத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..