டில்லி,
நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்துக்குள்  நாடு முழுவதும் உள்ள  ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறி வித்து ஒரு மாதம் கடந்தும் இன்னும் பணப்புழக்கம் தீர்ந்தபாடில்லை. மக்கள் இன்றும் வங்கி வாசல்களில் தவமாய் தவமிருந்து பணம் எடுத்து செல்கின்றனர்.
நாடு முழுவதும்   பண தட்டுப்பாடு மட்டுமல்லாது சில்லரை தட்டுப்பாடும் உருவாகியுள்ளதால் தினமும் வங்கிகளில் திருவிழா போல் கூட்டம் கூடி விடுகிறது.
இதையடுத்து மக்கள் அனைவரையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
அதற்கு முன்னதாக அரசு நிர்வாகத்தையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.