டில்லி:
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  • கடந்த 21.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது.
  • அவர்கள், பிறந்த தேதியுடன் கூடிய கடைசியாக படித்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் மாற்று சான்றிதழ், பான்கார்டு எண், ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய, காப்பீடு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
  • அரசு பணியில் உள்ளவர்கள் பணி ஆவணம், பென்சன் உத்தரவு ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், இனிமேல் தந்தை அல்லது தாயார் அல்லது பாதுகாவலர்கள் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால்மட்டும் போதும்.
  • பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் நோட்டரி பப்ளிக், முதல் நிலை ஜூடிசியல் மாஸ்திரேட் போன்றவர்களிடம் அத்தாட்சி கையெழுத்து வாங்க தேவையில்லை. சுய சான்றிதழ் மட்டும் அளித்தால் போதும்.
  • திருமணமானவர்கள், திருமண சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை.
  • பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது கணவன்/ மனைவி பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
  • பிறந்த தேதி தெரியாமல் காப்பகங்களில் வளர்ந்தவர்கள், தங்களது காப்பக தலைவரிடம் சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதும்.
  • உள்நாட்டில் தத்தெடுத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி அளித்து ஆவணம் வழங்கினால் போதும்.
  • உயர் அதிகாரிகளிடம் ஐடன்டி சர்டிபிகேட் வாங்க முடியாத அரசு ஊழியர்கள், அவசர தேவைக்காக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சுய சான்றிதழ் அளித்தால் போதும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.