கமதாபாத்

குஜராத் மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு அவருடைய ஒரே ஒரு வாக்கு மட்டும் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் குஜராத்தில் உள்ள 8,686 கிராமங்களுக்கான பஞ்சாயத்துத் தேர்தல்   நடைபெற்றது. நேற்று முன் தினம் இதில் 6,481 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முடிவுகள்  இந்த தேர்தலில் வாபி மாவட்டத்தில் உள்ள சார்வாலா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சந்தோஷ் ஹல்பாத்தி என்பவர் போட்டியிட்டுள்ளார்.

ஆனால்  சந்தோஷ் ஹல்பாத்தி தேர்தலில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருக்கிறார். அவரால் செலுத்தப்பட அந்த ஒரு வாக்கைத் தவிர அவரது குடும்பத்தில் 12 பேர் உள்பட ஒருவர் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை.  சந்தோஷ் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் மனமுடைந்து அழுதுவிட்டார்.

சந்தோஷ் செய்தியாளர்களிடம் இதுகுறித்து “நான் தேர்தலில் வெற்றி தோல்வி சகஜமானது என்பதை அறிவேன். நான் இந்த தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கூட கவலைப்படவில்லை. இருப்பினும் எனது குடும்பத்தினர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அறியும்போது தான் மிகவும் கவலையாக உள்ளது” எனக் கூறி உள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு இதே போல் ஒரு வாக்கு மட்டுமே கிடத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.