தேர்தலில்  போட்டியிட மறுக்கும்  பா ஜ கவின் முன்னாள் குஜராத் முதல்வர்!

கமதாபாத்

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பா ஜ க தலைவர் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை பா ஜ க கடந்த 22 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது.   நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின், குஜராத் முதல்வர் ஆனவர் ஆனந்திபென் படேல்.   இவர் 1941 ஆம் வருடம் பிறந்தவர்.  குஜராத் மாநிலத்தின் 15ஆவது முதல்வராக 2014ஆம் வருடம் மே மாதம் முதல் 2016ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரை பணி புரிந்தவர்.    இவருடைய பணிக்காலத்தில் தலித் மக்கள் இடையே கலவரங்கள் பல நிகழ்ந்தன.    ஆனந்திபென் அதனை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது குஜராத் மாநிலச் சட்டசபைக்கு தேர்தல் நடை பெற உள்ளது.  பா ஜ க, காங்கிரஸ்  ஆகிய இரு கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளன.   இந்நிலையில் ஆனந்திபென் பா ஜ க தலைவர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில் தனது வயோதிகம் காரணமாக தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும்,  தனக்கு அளிக்க வேண்டிய வாய்ப்பை வேறு யாருக்கும் அளிக்கலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்திபென் படேல் தற்போது அகமதாபாத்தில் கடோல்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்..
English Summary
Gujarat ex cm is not contesting in election