குஜராத்:  சூடுபிடிக்கும் தேர்தல்… முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Must read

அகமதாபாத்:

குஜராத் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக  போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட இம்  மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக டிசம்பர் 9ம் தேதி, 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 14ம் தேதி, 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  டிசம்பர் 18ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன.

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சக்திசிங் கோகில் மற்றும் அர்ஜுன் மத்வாடியா ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே தவறாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை  பாஜக முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் மனிஷ் தோஷி குற்றம் சாட்டியுள்ளார். . இதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

More articles

Latest article