ஜம்மு-காஷ்மீர் உரி முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த 18 ராணுவ வீரர்களின் குழந்தைகளது கல்விச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்.
urimagesh
இந்த நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் பெண் குழந்தைகளின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
தந்தையை இழந்த குழந்தைகள் அழுத காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபோது தனது உள்ளத்தை அது உலுக்கியதாகவும் அதன் பின்னரே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் சவானி கூறினார்.
இதேபோல தேசத்துக்காக உயிர்நீத்த தியாகிகளாகிய இவ்வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் மேலும் ஆதரவும் உதவிகளும் குவிந்து வருகின்றன.