ஜிஎஸ்டி சந்தேகங்களுக்கு புதிய ஆப்! மத்திய அரசு வெளியீடு

சென்னை,

ஜி.எஸ்.டி பற்றிய சந்தேகங்களுக்கு  தெளிவு பெறும் வகையில் ஜிஎஸ்டி ரேட் பைன்டர் என்ற  புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும், இந்த மாதம் ( ஜூலை) 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமலானது. இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக வணிகர்கள் கூறி வருகின்றனர்.

எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு நேற்று புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.டிரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.

இந்த ஆப் மூலம் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மத்திய சுங்கத்துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் இந்த ஆப்பை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
GST Rates Finder: A GST app launched by government of India