டெல்லி: 25கிலோவுக்கு அதிகமான அளவில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள் வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய மறைமுகவரிகள் வாரியம் (சிபிஐசி) விளக்கம் அளித்துள்ளது. ஆனால், ஏழைகள் வாங்கும் குறைந்த அளவிலானஉணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது சாமானிய மக்களை திட்டமிட்டு மேலும் கடனாளியாக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அரிசி, கோதுமை உள்பட பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்ளுக்கு மத்தியஅரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப் படும், லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்களான  பால், தயிர், பனீர், மோர், லஸ்ஸி, அரிசி, கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது .இந்த புதியவரி விதிப்பு 18ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது சாமானிய மக்களிடையே பெரும் குழப்பத்தையும், மத்தியஅரசுமீதுகடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ஃபிரி  பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்துமா என்பது குறித்து  மத்திய மறைமுகவரிகள் வாரியம் (சிபிஐசி) விளக்கம் அளித்துள்ளது.

இதில் லேபிள் மற்றும் பிராண்டட் பொருட்களுக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி வரியா அல்லது மற்றவற்றுக்கும் ஜிஎஸ்டி வரியா என்பது குறித்து குழப்பம் நிலவியது அது குறித்து மத்திய மறைமுக வரிகள் நேரடி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஃபிரி பேக்கிங் (ஒரே மூட்டையாக) செய்யப்பட்ட 25 கிலோ அல்லது 25 லி்ட்டருக்கு உட்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். உணவுப் பொருட்களான பருப்பு வகைகள், அரிசி, கோதுமை, கோதுமை மாவு, உள்ளிட்ட மாவுப் பொருட்கள் 25 கிலோவுக்குள் இருந்தால், அவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்

ஆனால் சில்லறை விற்பனையாளர், உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரிடம் இருந்து வாங்கும் பொருளை 25 கிலோ சில்லரையில் வழங்கினால், நுகர்வோருக்கு விற்பனை செய்யும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

முன்பே பேக்கிங் செய்யப்பட்ட 25 கிலோ எடை அல்லது அதற்கு குறைவான எடையுள்ள கோதுமை மாவு, அரிசி மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5சதவீதம் வரி உண்டு. ஆனால், 30 கிலோ பேக்கிங்காக இருந்தால் ஜிஎஸ்டி வரி இல்லை.

ஒருவேளை நுகர்வோர் ஒருவர் 10 கிலோ அரிசி பேக்கிங்காக, 3 வாங்கினால், அதாவது 3 பத்துகிலோ மூட்டையாக 30 கிலோ வாங்கினாலும், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஏனென்றால், தனித்தனியாக 10கிலோ பேக்கிங்காக வாங்கியதால், 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி உண்டு.

ஒருவேளை ஒவ்வொரு 10 கிலோ பேக்கிங்கையும், 100 கிலோவாக மாற்றி பெரிய பேக்கிங்காக மாற்றினாலும், ஜிஎஸ்டி வரி உண்டு.

இதுபோன்ற பேக்கிங் பொருட்கள் உற்பத்தியாளரிடம் இருந்து பகிர்வாளருக்கு வழங்கப்படுகிறது.

10 கிலோ பேக்கிங் என்றாலே 25 கிலோவுக்கு உள்பட்டு வந்துவிடுவதால், 5 சதவீதம்வரி உண்டு.

அதேசமயம் விருந்து, விசேஷங்கள், பண்டிகைகளுக்காக 50 கிலோ அரிசி மூடையாக, கோதுமை மூடையாக வாங்கினால், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

25 கிலோ அல்லது 25 லிட்டர் கொண்ட ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள்ட் உணவுப் பொருட்களுக்கு மட்டும்தான் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும்.

என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழைகள் வாங்கும் குறைந்த அளவிலானஉணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களை திட்டமிட்டு மேலும் கடனாளியாக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.