நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ஜிஎஸ்டி வரிவரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு

Must read

டில்லி:

லைநகர் டில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் 32வது கூட்டம் நேற்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே மத்தியஅரசு இந்த வரிச்சலுகை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு ஜிஎஸ்டி  அமல்படுத்தியதும் முதல் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் சில மாற்றங்களை செய்து வருகிறது. இதுவரை 32 ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கடந்த சில கூட்டங்களில் பெரும் பாலான பொருட்களின்  வரி விகிதங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பாஜக மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தை குறைக்கும் நோக்கிலே வரி விகிதங்களில் மாற்றமும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வரு கிறது. கடந்த கூட்டத்தின்போது சினிமா டிக்கெட் கட்டணம்,  எல்இடி டிவி, கம்ப் யூட்டர் மானிட்டர் உள்பட  23 பொருள்களின் மீதான வரி  28 சதவிகிதத்தில் இருந்த 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போதும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு வரி விலக்கின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, இந்த புதிய அறிவிப்புகள் ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும் இதன் காரணமாக  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடையும் என்றும் தெரிவித்தார்.

More articles

Latest article