ஜிஎஸ்டி: கருத்தொற்றுமை ஏற்படவில்லை….? ஜேட்லி

Must read

 
டில்லி,
ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் நடைபெற்ற  கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அடுத்த கூட்டத்தை வரும் 11ந்தேதி மீண்டும் கூட்டுகிறது.
ஜிஎஸ்டி வரிவிகிதம் குறித்து இறுதி செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 5ஆவது கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

நிதி அமைச்சர் அருண்ஜேட்லி
நிதி அமைச்சர் அருண்ஜேட்லி

டெல்லியில் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக அடுத்த கூட்டம்  வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,
ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளிடையேயான அதிகாரங்கள் தொடர்பான பிரச்னையில் தீர்வு காண வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.  ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மீது இந்த முறை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் தரப்பில் சில ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், மாநில அரசுகள் கூறிய பிரச்சினைகளுக்கு இதுவரை இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறினார்.
தமிழக அரசின் நிலை?
இரண்டு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில்  தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  மா.பா.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி., வரி குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. எனினும், மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால், மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் நிலை உள்ளது,” என்று  கூறினார்.
தமிழகஅமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
தமிழகஅமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

ஜி.எஸ்.டி., வரி நடைமுறை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக நான்கு சட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறோம். அ.தி.மு.க.,வின் வற்புறுத்தால், இரண்டு கருத்துருக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொருட்களுக்கு யார், எப்படி வரி விதிப்பது என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் முக்கியமான எட்டு முதல் 10 பொருட்களுக்கு வரை, அந்தந்த மாநிலங்களே வரியை விதிக்கலாம் என ஜி.எஸ்.டி.,யில் முதலில் இருந்தது. ஆனால், இதை காங்., தலைமையிலான மத்திய அரசு மாற்றியது. இதற்கு தி.மு.க.,வும் ஆதரவு தெரி வித்தது.
ஜி.எஸ்.டி., வரியில் முக்கியமான, 12 மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளன. இது பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை பொறுத்தது. மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்படு கின்றன. அவை முன் வைக்கும் மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், கருத்து ஒற்றுமை ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

More articles

Latest article