சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பணிகளுக்காக மாநிலஅரசு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்4 தேர்வு இரண்டாண்டு கொரோனா பேரிடருக்கு பிறகு 9870 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவது நடைபெற்றது.
இந்தத் தேர்வில் 21 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். 15 லட்சம் பேர் வரை தேர்வினை எழுதி இருந்தார்கள். ஆனால், தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகும் நிலையில், இன்றுவரை வெளியாகவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், 3 மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், திமுக அரசு 7 மாதமாக தேர்வு முடிவுகளை வெளியாடதது, பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான விமர்சித்து வந்த நிலையில், தற்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.