சென்னை: குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக, தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள , சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியது. இதனால் தாமதமானது. மேலும் , தேர்வு தொடங்கியதில் இருந்து 3 மணிநேரம் கணக்கில் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. ஆனால், ஒரு தரப்பினர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இந்த நிலையில், குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  , பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்த பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வு 30 நிமிடங்கள் தாமதமாக 2.30 மணிக்கு தொடங்கும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பணிகிளில் காலியாக மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும்  பிரதானத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதுகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் மாநிலம் முழுவதும் குளறுபடி… கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிப்பு…