குறைகளை போக்கும் குலதெய்வ வழிபாடு!

Must read

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது என்பது ஆன்றோர் கருத்து.
குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம். ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
ayyanar600
பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் குல தெய்வதை மறக்கலா காது.
குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்கா லம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன் னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும்.
குல தெய்வம் என்பதனை குலத்தினை காக்கின்ற தெய்வம் என்று பொருள் கொள்ளலாம். இவ்வழிபாடா னது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக் கிறது. இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் முறையாக பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது.
நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் வேண்டியும், மழை பெய்யவும் மற்றும் சுபிட்ச வாழ்வு வேண்டியும் மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்க ளின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக நேரில் சென்று பூஜை செய்வது நன்று.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும் குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.
ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.
இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
திருமணம், வீடு கட்டுதல் போன்ற விசேஷங்களின் போது முதலில் குல தெய்வத்தை வழிபட்ட பின் வேலை களை ஆரம்பிக்க வேண்டும்.  பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சி கள் குல தெய்வக் கோயில்களிலே நடைபெறுகின்றன.
திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் துவங்கும் விழா போன்றவற்றின் அழைப்பிதழ்களை குல தெய்வத்தி டம் வைத்து முதலில் வழிபாடு நடத்திய பின்பே பின் எல்லோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகின்றன.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

More articles

Latest article