தமிழக இடைத்தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்!

Must read

தஞ்சாவூர்,
மிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களை  இன்று  தாக்கல் செய்தனர்.
nomination
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில்  நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்தநிலையில் அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தஞ்சையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி – நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் ஓம்சக்தி சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் போஸ் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் செல்வம், உதயகுமார் உள்ளிட்டோரும் பரப்புரையை தொடங்கினர்.
அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் 3 தொகுதி வேட்பாளர்களும்  இன்று வேட்புமனுக்கலை தாக்கல் செய்தனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article