சென்னை,
ங்க கடலில் உருவான முதலை  புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
stome1
வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 9 மணி முதல் இந்த புயல் படிப்படியாக வலு இழந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 240 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து 390 கி.மீ. தொலைவிலும் கடலில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வட தமிழகத்தை நோக்கி மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தீபாவளி தினமான நாளை வட மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
1stome
1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மழை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, கோவை போன்ற உள் மாவட்டங்களில் 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல் வடக்கு கேரளா பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் 31-ந் தேதி முதல் கேரளா விலும் மழை தொடங்கும் 1-ந் தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மாலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், நாளை முதல் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.