பச்சை நிறமே… பச்சை நிறமே….: 'ஜெ.' வாக மாறினார் சசிகலா!

Must read

'ஜெ.' வாக மாறினார் சசிகலா!
‘ஜெ.’ வாக மாறினார் சசிகலா!

சென்னை,
திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா, இன்று ஜெயலலிதாவாக மாறி காட்சியளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, அதே நிற சேலையில் பளிச்சென்று மேக்கப்போடு கலக்கலாக காட்சி தந்தார் வி.கே.சசிகலா.
அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை எடுத்துக்கொண்டு, போயஸ்தோட்டம் நோக்கி  ஓட்டமாக ஓடி வந்த தமிழக முதல்வரும், பாராளுமன்ற துணைசபாநாயகருமான தம்பித்துரையும்  அங்கு  மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கண்டனர். கண்டதும் கண்ணீர் சிந்தினர்.
ஆஹா, இது நமது ‘அம்மா’  போலவே இருக்கிறாரே ‘சின்னம்மா’  என ஆச்சரியம் அடைந்தனர்.
கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களை பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளார்கள். நீங்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என வேண்டினர்.
சசிகலா பொதுக்குழு  தீர்மான நகலை வாங்கி ஜெ.படத்தின் முன் வைத்து வணங்கி,  சிறிது நேரம் கழித்து தனது சம்மதத்தை தெரிவித்தார்.
இன்று சசிகலா பச்சை நிற சேலையில் பச்சை பசேல் என்று பளிச்சென்று காட்சி அளித்தது அதிமுக தொண்டர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை கலர்  செண்டிமெண்டான கலர். அவர் கலந்துகொள்ளும்  முக்கிய நிகழ்ச்சிகளின்போது பச்சை நிற புறவையே அணிந்திருப்பார். அவரைப்போலவே தற்போது சசிகலாவும் பச்சை நிறத்துக்கு மாறியிருப்பது தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பச்சை நிறமே பச்சை நிறமே!
இலையின் இளமை பச்சை நிறமே!
உந்தன் நரம்பும் பச்சை நிறமே!
எனக்கு சம்மதம் தருமே!
என்ற அலைபாயுதே படத்தின் வரிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
Also read

 

More articles

Latest article