சென்னை,
திமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, சசிகலா புஷ்பா தாக்கல் செய்த அவசர மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தமிழக ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா  பதவியேற்க வேண்டி அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பொதுச்செயலாளராக வருவது பிடிக்கவில்லை.
மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா புஷ்பா, ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாதான் காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று சசிகலா போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டனர்.