சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது, அதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன், கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி, பிரபல மருத்துவ நிபுணuன ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் எச்சரிக்கை செய்துள்ளார்.
உலகம் முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது ஒமிக்ரான் வைரஸ் . இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதனால் மக்கள் மனதில் மெத்தனமான போக்கே காணப்படுகிறது.
ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து அசாம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடுஉள்பட சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளை மட்டுமே தீவிரப்படுத்தி உள்ள நிலையில்,எந்தவொரு லைக்டவுனும் அறிவிக்கவில்லை.
இதனால், பொதுமக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, பல இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடி தங்களது மகிழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர். மக்கள் கூடுவதற்கு தமிழஅரசு தடை விதித்தும் அதை கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே பார்ட்டிகளும், நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணரான டாக்டர் பிரதீப் கவுர், ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,
பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முகக்கவசம் அணிதல், முதியோர்களைப் பாதுகாத்தல், அரங்குகள் உள்ளிட்ட நெருக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பது மற்றும் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த அக்டோபர் 17ம் தேதி 2364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 31ம் தேதி 1959 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய வார பாதிப்பை விட 405 குறைவாக உள்ளது.
ஆனால், நவம்பர் 14ம் 1665 உள்ளதாகவும், நவம்பர் 28ம் தேதி கொரோனா பாதிப்பு 1595 க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், டிசம்பர் 12ம் தேதி 120 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டு 1715 என்ற எண்ணிக்கையிலும், டிசம்பர் 26ம் தேதி 174 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு 1889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதை தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.