சென்னை:

ந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாக்கள் கடுமையாக இருந்தால்,  நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று நீட் பயிற்சி செயலியை உருவாக்கிய தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் கூறி உள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் கடந்த 6ந்தேதி நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் நடை பெற்று முடிந்தது. தேர்வில் கேட்கப்பட்ட இயற்பியல் பாடம் குறித்த கேள்விகள் சர்ச்சையை எழுப்பியது.

இந்நலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் தெரிவித்துள்ளார்.

தேர்வில்  கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறானது என்றும் குற்றம் சாட்டியுள்ள ராம்பிராச், அதற்கு தகுந்த அளவில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.

தொழில்நுட்ப நிபுணரான ராம்பிராச்,  நீட் தேர்வு பயிற்சி செயலியை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.