“தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து  நாடு முழுதும் பல ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

தேசிய,மாநில  நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மீண்டும் அதே இடங்களில் மதுக்கடைகளைத் திறக்க மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் திட்டமிடுகின்றன. இதைத் இதைத் தடுக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும்” என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

இக்கடிதத்தை மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு பாமக வழக்கறிஞர் எடுத்துச் சென்று அளித்தார். அதேபோல நடிகர் கமலஹாசனை அவரது வீட்டில் சந்தித்து அளித்தார்.

இதுபற்றி பாலு தெரிவிக்கையில், “எங்களுடைய முயற்சிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும்,, ‘வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான் என்பது முதுமொழி. இங்கு குடி உயர்வதைத்தான் கோன் (அரசு) விரும்புகிறது.

சாமானிய மக்கள் குடித்தே, தங்களை அழித்துக் கொள்கின்றனர்.  அரசுக்கோ வருமானம்தான் முக்கியமாக இருக்கிறது” என்று வேதனையுடன் கமல் தெரிவித்தார்” என்று பாலு தெரிவித்தார்.

.