டில்லி

கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே உள்ள 84 நாட்கள் இடைவெளியை மாற்ற அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு தற்போது கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரக்கால ஒப்புதல் அளித்துள்ளன.   இதில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளையும் மத்திய அரசு மொத்தமாக வாங்கி மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்து வருகிறது.

முதலில் கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு இடையில் 4 முதல் 6 வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.  அதன் பிறகு அந்த இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அரசு மாற்றியது.  தற்போது இதே இடவெளி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என் கே அரோரா, “தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் திறன் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளன.  அதன்படி இரு டோஸ்களுக்கிடையே ஆன இடைவெளியை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.