விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…

Must read

டெல்லி: பிரபல ஆன்லைன் நிறுவனங்களான பிரிப்கார்ட், அமேஷான் போன்ற நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, விழாக்கால சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களுடன்,  அது தயாரிக்கப்பட்ட நாடு உள்பட முக்கிய விபரங்கள் வெளியிடாதது தொடர்பாக  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஜூன் மாதத்தில் தொடங்கிய எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், சீன பொருட்களுக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் சீனப்பொருட்களை வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

இதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின்  சார்பில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய  இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால்,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்டோபர் 16 ம் தேதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது,  ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளை குறித்து, ஆன்லைன் நிறுவனங்கள் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவனமும், தி கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் அமேசான் நிறுவனமும்,  விற்பனையை தொடங்கி கல்லாகட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நோட்டிசில், ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த அவசியமான விபரங்களை வெளியிடாத து குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது சீன இறக்குமதியைக் குறைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article