அதானி விவகாரத்தில் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ்லாத ஜோஷி தெரிவித்துள்ளார்.

தேசிய மயமாக்கப்பட்டா வங்கிகளில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று சவடால் விட்ட அதானி நிறுவனம் ஒருவாரமாக அதற்கான முகாந்திரம் இல்லாமல் திணறி வருவதை அடுத்து அதன் பங்குகளின் மதிப்பு சந்தையில் குறைந்து வருவதோடு சொத்து மதிப்பும் சரிந்து வருகிறது.

இந்த நிலையில் அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுமக்கள் பணத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதானி விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நிலையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ப்ரஹலாத் ஜோஷி “அதானி விவகாரத்தில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அமளியில் ஈடுபடுகிறது” என்று கூறியுள்ளார்.