அரசு ஊழியர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு! தமிழகஅரசு விளக்கம்…

Must read

சென்னை: தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்திருந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற 75வது சுதந்தின தின விழாவின்போது, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், ஓய்வூதியதார்களுக்கு 3 சதவிகிதம்  அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளத. அதில்,   தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article