டெல்லி: சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து கடந்த 3ஆண்டுகளில் மத்தியஅரசு ரூ 8லட்சம் கோடி வருவாயை ஈட்டி உள்ளது. இதை பெருமையாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

எரிபொருள் மீதான வரியால் அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை நிர்மலா சீதாராமன் தெரி வித்து உள்ளார். சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி,  நவம்பர் 4ந்தேதி  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்த நிலையிலும் வருவாய் அதிகரித்துள்ளது.

பாராளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,  கடந்த மூன்றாண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியால் அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2020-21 நிதியாண்டில் அரசுக்கு 3.71 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, லிட்டருக்கு 19.48 ரூபாயாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி, 2019ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி, 17.98 ரூபாயாக குறைந்தது. இது, 2021ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, 27.90 ரூபாயாக உயர்ந்துள்ளது.  அதே நேரத்தில் டீசல் மீதான கலால் வரி 15.33 ரூபாயி லிருந்து 13.83 ஆக குறைக்கப்பட்டது. இதே காலக்கட்டத்தில், டீசல் மீதான கலால் வரி 15.33 ரூபாயிலிருந்து 21.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 31.83 ரூபாயாக இருந்த கலால் வரி 32.98 ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே, நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரி 27.90 ரூபாயாகவும் டீசல் மீதான கலால் வரி 21.80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

 “கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரி உள்பட மத்திய கலால் வரி 2018-19 நிதியாண்டு, 2,10,282 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. அதேபோல், 2019-20 நிதியாண்டு, 2,19,750 கோடி ரூபாயும் 2020-21 நிதியாண்டு, 3,71,908 ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.